2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்.!

Advertisements
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரு மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 3 உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் மதிமுகவின் தனி சின்னத்திலும் போட்டியிட்டது.
இந்த நிலையில் சீர்காழி செந்தில் செல்வன், கடையநல்லூர் டி.எம்.ராஜேந்திரன், மொடக்குறிச்சியில் செந்தில் நாதனும் மதுரை தெற்கில் பூமிநாதனும் போட்டியிட்டனர். இவர்களில் சீர்காழி, கடையநல்லூரில் மட்டும் உதயசூரியனில் போட்டியிட்ட மதிமுகவினர் வென்றுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் மதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல திருச்சி வந்திருந்த முதல்வர் விஜய்யை எம்பி என்ற முறையில் துரை வைகோ சந்தித்து பேசியிருந்தார்.
அந்த சந்திப்புக்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டோம். இனி நாங்கல் தனி இயக்கம். உதயசூரியன் சின்னத்தில் நின்றதால் எங்களால் தவெகவுக்கு ஆதரவு தர முடியவில்லை. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இடதுசாரி போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்திருந்தன.
இதில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாடு மக்கள் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அளிக்காவிட்டாலும் த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதை ‘மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பதற்கு இணங்க நாம் மதிக்க வேண்டும். இந்த அரசு சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கையுடன் அதற்கு ஓராண்டு வரை கால அவகாசம் அளிக்க வேண்டும்.
அரசு ஏதேனும் தவறிழைக்கும் பட்சத்தில், கூட்டணியில் இருக்கும் கட்சிகளோ அல்லது எங்களைப் போன்ற வெளியில் இருக்கும் இயக்கங்களோ தாராளமாகக் கண்டனங்களையும் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *