
உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம். இது சமீபத்தில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை விவரம்.
நாம் இருவர் நமக்கு இருவர் வாசகம் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும், பொது இடங்களில் அரசின் விளம்பரப் பலகை இருக்கும். அதாவது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சி.
குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதுமா ? அவர்களுக்கு நல்ல சத்தான சாப்பாடு, கல்வி, நல்ல துணி மணி , வீடு வாசல் இவை அனைத்தும் பெற்றோர் கொடுக்க வேண்டியது கடமை. வருமானம் இல்லாமல் குழந்தைகள் இருந்தால், குடும்பமே வறுமையால் வாடும். இவயனைத்தையும் தவிர்க்க எடுக்கப்பட்டதே குடும்ப கட்டுப்பாடு.
மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு கூட்டங்கள், மேடைப்பேச்சுக்கள், ஏன் நாடகங்கள் கூட நடத்தப்பட்டது. முப்பது கோடி முகமுடையாள் என்று பாரதி கூறினார். ஆனால் தற்போது 140 கோடியைத் தாண்டியுள்ளது. குடும்பத் தலைவிகள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பொருட்டு ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டு அதற்குக் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் எனப் பெயரிடப்பட்டது. இதற்கான நாள் தான் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் நாளாக அக்டோபர் 17 ஆம் தேதி உலக குடும்ப கட்டுப்பாடு தினம். அல்லது `உலக வாசக்டெமி தினம்’ என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு என்பது பெரும்பாலும் இந்திய அரசாங்கத்தால் மக்கட் தொகையினை கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது. 1965 முதல் 2009 வரை, கருத்தடை பயன்பாடு மும்மடங்கு அதிகரித்துள்ளது. 1970 ல் திருமணமான பெண்களின் கருத்தடை விகிதம் 13 சதவீதத்திலிருந்து 2009 இல் 48சதவீதம் ஆக அதிகரித்தது.
மேலும், கருவுறுதல் விகிதம் பாதியாகக் குறைந்துள்ளது. 1966 ல் 5.7 ஆக இருந்தது 2012 ல் 2.4 ஆகக் குறைந்தது, ஆனால் தேசிய கருவுறுதல் விகிதம் அதிகமாகவே உள்ளது. இந்தியா ஒவ்வொரு 20 நாட்களுக்கும் 1,000,000 மக்களை அதன் மக்கள் தொகையில் சேர்க்கிறது.
21-ஆம் நூற்றாண்டின் இறுதியில் திட்டமிடப்பட்ட இரண்டு பில்லியன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விரிவான குடும்பக் கட்டுப்பாடு முன்னுரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
2016 இல், மொத்த கருவுறும் வீதம் இந்தியாவில் பெண் ஒன்றுக்கு 2.30 என இருந்தது கருக்கலைப்பு வீதமானது 1000 பெண்களில் 47.0 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிக கருக்கலைப்பு விகிதங்கள் 15 முதல் 49 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிறது.
1000 பெண்களில் 70.1 சதவீதமாகக் கருக்கலைப்பு வீதம் உள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் நிகழும் கருக்கலைப்புகள் கருத்தரிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு ஏற்படுகின்றன.
இதில் பகுதியானது திட்டமிடப்படாத சூழ்நிலையில் ஏற்படுகிறது. பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதங்கள் குறைவதால், டெமாகிராபிக்ஸ் டிரான்சிசன் மாடல் என்பதில் இந்தியா மூன்றாவது நிலையில் உள்ளது. 2026 இல், மொத்த கருவுறுதல் விகிதம் 2.1 ஐ அடைந்தவுடன் இந்தியா நான்காவது நிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்கள் கருத்தடை பயன்பாடும் பரவலாக இருந்தது. அரசு மருத்துவமனைகளில் கருத்தடை மாத்திரைகள், காப்பர் டி மற்றும் காண்டம்ஸ் போன்றவை அதிகாரப் பூர்வமாக அமலுக்கு கொண்டு வந்தது.
மேலும் கருத்தடை செய்துகொள்ளும் நபர்களுக்கு உதவித்தொகை, மற்றும் ஊட்டச் சத்துப் பொருட்கள் என அனைத்தையும் அரசாங்கம் கொடுத்து ஊக்குவித்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இவை அனைத்தும் பயன்பத்துபவர்கள் உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும், பெண்களுக்குப் பாதிப்புகள் என்னென்ன போன்றைவை குறித்தும் ஆராயப்பட்டு அதற்கான நிவாரணங்களும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. 13 சதவீதத்திலிருந்து 48 சதவீதமாக உயர்ந்தது.
தமிழ் நாட்டில் அதிக சதவீதம் மக்கள் கருத்தடை முறையைப் பயன்படுத்தியுள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் மிகக் குறைந்த அளவே உள்ளது. படித்த பெண்கள், சுயமாகச் சிந்திக்கும் தன்மை, குடும்ப பொறுப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு ஒத்துழைத்து நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அது எல்லாம் அப்போ. நாம் இருவர் நமக்கு ஒருவர் இப்போ. இன்றைய சமுதாயம் கல்வியில் நல்ல முன்னேற்றம் குறிப்பாகப் பெண்கள் தங்களுடைய சொந்தக் காலில் நிற்கும் திறன், வளர்ந்து வரும் நவீன அறிவியல் மாற்றங்கள், பொருளாதாரம் குடும்ப சூழல் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.
மேலும் குழந்தை பெற்றுக் கொள்ளும் காலம், குறிப்பிட்ட இடைவெளி இவை அனைத்தையும் மகளிர் நன்கு அறிந்து வைத்துக் கொண்டு இந்நாளில் செயல்படுகிறார்கள். வீடு முக்கியம்… நாடும் முக்கியம்…வீடு சுபிக்ஷமானால் நாடும் சுபிக்ஷமாகும்…
அது சரி இன்று நம் நாட்டின் மக்கள் தொகை தெரிந்து கொள்வோம். 142 கோடியே 57 லட்சத்து75 ஆயிரத்து 850 பேர். உலகில் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளோம்.



