Advertisements

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் இந்தியா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இதில், சிறப்பாக, அதிரடியில் மிரட்டிய ஹார்திக் பாண்டியா 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இதையடுத்து, 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 12 ஓவரில் 76 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம், இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Advertisements



