ராகுல்காந்தி, கார்கே தலைமையில் தில்லியில் எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டம்!

தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், அயோத்தி இராமர் கோவில் நன்கொடைப் பணத்தைச் சுருட்டியதைக் கண்டித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியினர் மீது ஜூலை 20ஆம் நாள் காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து அப்போது முழக்கமிட்டனர்.

அயோத்தி இராமர் கோவிலுக்கு வந்த நன்கொடைப் பணம், நகைகள் ஆகியவற்றைச் சுருட்டியதைச் சுருட்டியதை நடித்துக் காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே, பிரியங்கா ஆகியோரும் கூட்டணிக் கட்சியினரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *