National Education Day: இன்று!

கல்வி கரையில கற்பவர் நாள் சில … கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு… எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு…

கல்வி  மனிதனின் உரிமை. சமுதாய மாற்றம். சமூகத்தில் ஒருவரின் அந்தஸ்தை உயர்த்துவது கல்வி. ஒரு நாட்டின் முன்னேற்றமே அந்நாட்டு மக்களின் கல்வியில் தான் அடங்கியுள்ளது. வசதி வாய்ப்புகள் போன்றவை கல்வியின் மூலம் கிட்டும். இதனால் தனி மனிதனின் வறுமை ஒழிக்கப்படும். நாடு வளர்ச்சி பெறும். 244 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கல்வி கற்று வெளியில் வருகின்றனர். 771 மில்லியன்  பெரியவர்கள் கல்வியறிவு இல்லாமல் இருக்கின்றனர். அனைவருக்கும் கல்வி , வீடு  தேடி கல்வி என்று அரசாங்கம் கல்வி கற்போரின் முன்னேற்றத்திற்கு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

கல்வியின் அவசியத்தை  இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு 15 முதல் 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் இந்திய நடுவண் அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை தற்போதைய கல்வித்துறை மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினத்தை தேசிய கல்வி நாளாக அறிவித்தது. இந்த நாளில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கருத்தரங்கம், கட்டுரைப் போட்டிகள், கல்வி சார் நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டிகள், கல்வி சார் பணிமனைகள், பேரணிகள் நிகழ்த்தி இந்நாளினைக் கொண்டாடலாம்.

இதன் மூலம் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை மற்றோருக்கு உணர்த்தலாம். பெண் கல்வி மிகவும் அவசியமாகிறது. UNESCO  பல முயற்சிகளை எடுத்து வருகிறது. குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளி செல்லாத சிறார்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைவரும் கல்வி கற்க வேண்டும். நாட்டையும் ,வீட்டையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *