Advertisements
தன்னை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினால் ரிவெஞ்ச் எடுப்பேன் என பிரதீப் ஆண்டனி கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபரில் இருந்து ஒளிபரப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் 5 போட்டியாளர்கள் வைல்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். வைல்டு கார்டு என்ட்ரிக்கு பிறகு ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டில் குழப்பங்களும், கூச்சலும் சண்டையும் நடந்து வருகிறது.
கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமா, மாயா, ஜோவிகா, ஐஷூ உள்ளிட்டோர் உரிமைக்குரல் எழுப்பி, பிரதீப் ஆண்டனிக்கு எதிராக குற்றம்சாட்டினர். பிரதீப் இரவில் கத்துகிறார், கதவை திறந்து கொண்டு பாத்ரூம் செல்கிறார் என குற்றம்சாட்டி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்வதாக தெரிவித்தனர். போட்டியாளர்கள் பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால் பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அப்போது பிரதீப் தனது பக்க விளக்கத்தை கூற வரும்போது, அவரை தடுத்த கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார். அதன்பின்னர் பேசிய கமல்ஹாசன் பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும், பெண்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்பதால் பிரதீப்பை வெளியேற்றியதாக கூறினார். இதனால், பிரதீப்க்கு ஆதரவாக திரைபிரபலங்களும், ரசிகர்களும் டிரோல் செய்து வந்தனர்.
பிக்பாஸ் வீட்டிலும் பிரதீப்க்கு எதிராக ரெட்கார்டு கொடுக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசித்ரா மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோர் மாயா, பூர்ணிமா, ஜோவிகா மற்றும் ஐஷூவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் இரு கூட்டணியாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொண்டனர். அதேநேரம் பிரதீப்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.
இந்த தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதீப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், தனக்கு நல்ல விளையாட்டை தந்தால் சிறப்பான ஷோ தர காத்திருப்பதாகவும், இந்த முறை ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், படத்தின் இரண்டாவது பாதியில் ரிவெஞ்ச் மோடி தான் தான் விளையாடுவேன், ஏதோ பார்த்து செய்யுங்க என கூறியுள்ளார். பிரதீப் இவ்வாறு கேட்டு கொண்டுள்ளதால், அவர் திரும்ப பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
If you give me a good game, I’ll give you a great show 🎈@EndemolShineIND@vijaytelevision@ikamalhaasan
I promise, I’ll also behave. Oru intermission mudichuttu vara padothoda revenge mode second half madhiri aduren. https://t.co/g0saIPiDat#PaathuSeinga
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 10, 2023