கப்புசினோ டே இன்று!
கப்புசினோவின் சுவையான மற்றும் கிரீம் சுவைகளைக் கொண்டாடுங்கள். இது இத்தாலியில் இருந்து வந்த காபி பானம். இது காபி பிரியர்களுக்கு சூடான, நுரை, பால் காபி பானத்தின் வெப்பத்தையும் ஆறுதலையும் கொண்டுள்ளது.
நவம்பர் மாதத்தின் 8-வது நாளான நவம்பர் மாதம் 8-ம் நாள் மக்கள் கப்புசினோவைக் கொண்டாடி கௌரவிக்கின்றனர். காபி குடிக்காதவங்க யாராவது இருக்காங்களா. சிகிரி காபி, ஃபில்டர் காபி, இன்ஸ்டண்ட் காபி.. என்ன வேணா கேளுங்கள்..
கப் எடுங்க… காபி ஊத்துங்க … குடிங்க …காபி சாக்கலேட் வேணுமா. காபி கேக் வேணுமா.. இன்றைக்கு நிறைய சாப்பிடுங்க.. கொண்டாடுங்க..
காபியில் பல வகைகள் உண்டு. காபி பிரியர்கள் உலகில் ஏராளம். சும்மா கமகம என்று நுரை பொங்க சூடா ஆவி பறக்க இருக்கும் காபி வாசனை நுகர்ந்து இழுத்து உறிஞ்சி குடிக்கும் சுகமே தனி. இன்று தேசீய காப்புசினோ டே. கப்பில் காபி ஊற்றி இரண்டு பிஸ்கட்டுடன் குடிப்பது வழக்கம்.
இந்த பெயர் கபிசின் ஃப்ரையர் என்று பிரான்சில் உள்ள கத்தோலிக் சர்ச்சில் 16 ஆம் நூற்றாண்டில் இத்தாலி, ரோம் முதலிய நகரங்களில் ஏழ்மையான மக்களுக்கு வழங்கப்பட்டது. முதலில் ஒட்டாமோ காபியானது பால் மற்றும் தேனுடன் கலந்து தரப்பட்டது. இதற்கு கபுசின் என்று அழைத்தனர். பிறகு வீடுகளில் தயாரித்து குடிக்க ஆரம்பித்து, நாளடைவில் பார்ட்டி போன்ற அனைத்து விசேஷங்களிலும் கப்புகளில் ஊற்றி விருந்தில் முதல் இடம் பிடித்தது. இன்றும் நமது இல்லங்களில் நண்பர்கள் மற்றும் விருந்தினர்கள் யார் வந்தாலும் காபி குடியுங்கள் என்று உபசரிப்பை வழக்கமாக ஒன்றாக உள்ளது. நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகி விட்டது காபி என்றால் மிகையாகாது.