C. S. Chellappa: பிறந்ததினம்!

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் பிறந்ததினம்!.

சி.சு.செல்லப்பா 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 29தேதி பிறந்தார், ஒரு எழுத்தாளர், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இலக்கிய விமர்சகர். “எழுத்து” என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள்.

தமிழின் சிறந்த நாவல்களாகக் கருதப்படும் வாடிவாசல், “சுதந்திர தாகம்” போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

“சுதந்திரச் சங்கு” இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு “மணிக்கொடி” இதழ் கைக்கொடுத்தது. “சரசாவின் பொம்மை” என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.
புதிய எழுத்தாளர்களைச் சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார். -1998ஆம் ஆண்டு  டிசம்பர் 18, ஆம் தேதி காலமானார்.இன்று அவருடைய பிறந்த தினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *