Meenakshi Academy’s 17th Annual Convocation: 1158 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கிப் பாராட்டு!

Advertisements

காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியின் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி (PhD) மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை பகுதியில் உள்ள மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (MAHER) தனியார் மருத்துவ கல்லூரியின் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் இ.என்.டி (E.N.T) ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும்  பேராசிரியரும் ஆன  பத்மஸ்ரீ.டாக்டர் மோகன் காமேஸ்வரன் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவர் பட்டங்களை வழங்கினார்.

இதில் இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி (PhD) மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டனர்.

அதே நேரத்தில் MAHER இன் மதிப்பிற்குரிய ஏழு முன்னாள் மாணவர்கள் ‘சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது’ களைப் பெற்றனர். கூடுதலாக, உட்சுரப்பியல்  மருத்துவரும் (Endocrinologist) மற்றும் பொது மருத்துவரும் ஆன டாக்டர் உஷா ஸ்ரீராம் அவர்களுக்கு மகப்பேறு மருத்துவ நலன் மற்றும் பெண் முன்னேற்றம் ஆகிய துறைகளில்  அவர் கொடுத்த சிறப்பான பங்களிப்பைப் பாராட்டும் வகையில் Honoris Causa கெளரவ விருது தரப்பட்டது.

மேலும் சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் இ.என்.டி (E.N.T) ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு இயக்குனர் மோகன் காமேஸ்வரன் இலவசமாக மருத்துவம் அளிக்க நன்கொடையாக ரூ.10 லட்சம் காசோலையை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாக வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், இடைக்கால வேந்தரான கோமதி ராதாகிருஷ்ணன்,  அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கிப் பட்டம் பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இதில் மேலும் பட்டங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *