
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,520-ஆக விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,565-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள்மீதான சுங்க வரி 15 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. சில வாரங்களுக்கு முன்னர் 3500க்கும் மேல் தங்கம் விலை குறைந்து வந்தது. பின்னர் கடந்த சில நாட்களாகத் தங்கம் ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.52,440-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.6,555-க்கு விற்பனையானது.
இன்றைய (ஆகஸ்ட் 16) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,520-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,565-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,020-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.56,160-ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



