today rasipalan:இன்றைய ராசிபலன் – 16.08.2024

Advertisements

மேஷம்


இன்று பரணி, கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்குச் சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

ரிஷபம்


பூர்வீகமான தங்களுடைய சொத்துப் பிரச்சினைகள் பெரியவர்களின் முன்னிலையில் அவை தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். வெளியூர் பயணங்கள் தங்களுக்கு திருப்புமுனையாக இருக்கும். பெற்றோர்களுக்குப் பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். பணத்தை தாராளமாகச் செலவழிப்பதை தவிர்ப்பது நல்லது. நீண்டதூர பயணம் வெற்றிதரும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்


பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை தீரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பர். மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கம் விலகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். விரும்பிய நபரைச் சந்தித்து பேசுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வங்கிக்கடன் உதவி கிடைக்கும். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்


இன்று சில முக்கியமான விசயங்களில் தைரியமாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்களிடம் சமாதானமாகச் செல்வீர்கள். பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். தம்பதிகளிடம் அன்பு மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

சிம்மம்


பல நாட்களாக வீடு தேடியவர்களுக்கு நல்ல வீடு கிடைக்கும் யோகம் இன்று உண்டாகும். பார்த்து வைத்த புதிய வீட்டிற்கு முன் பணம் தருவீர்கள். அலுவலகத்தில் தங்களுக்கு தொல்லை கொடுத்தவர் இன்று விடுமுறை எடுப்பார். அது தங்களுக்கு நிம்மதி தரும். கல்விகற்க அடம்பிடித்த தங்கள் பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி


முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். வியாபாரத்தில் அதிக விற்பனையைக் கூட்ட புதிய வகை சலுகைகளைத் தருவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாகக் கையாளுங்கள். மாணவர்கள் நற்பெயர் வாங்கி பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பர். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் அமையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் சிரமங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்


அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். படிப்பில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த காரியங்கள் இன்று பலிதமாகும். உறவினர்களால் நல்லதொரு நன்மை நடக்கும். மாணவர்கள் இன்றைய பாடங்களை இன்றே படித்து விடுவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்


வரவேண்டிய பணம் வராதகாரணத்தால் தங்களுக்கு பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த முக்கிய செய்தி மகிழ்வைத் தரும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைத்து வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

தனுசு


இன்று தங்களுக்கு உண்டான கடனை அடைக்க வழி பிறக்கும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.இருப்பினும் தங்களுக்கு நல்லதொரு ஆர்டர்களை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்


குடும்பத் தலைவிகளுக்குப் பணப்புழக்கம் தாராளமாகக் கிடைக்கும். அதில் ஒரு பகுதியைச் சேர்த்து வைப்பர். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். நீண்ட கால பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வேலையாட்களால் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும். காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கும்பம்


குடும்பத் தலைவிகளுக்குத் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உத்யோகத்தில் மதிப்புக்கூடும் . மனைவிவழியில் உதவிகள் உண்டு. தங்கள் பிள்ளைகளின் படிப்பில் அருகே இருந்து அவர்களின் படிப்பைச் சற்று நேரம் கவனிப்பது நல்லது. பெண்கள் புதிய தொழில் துவங்க ஏதுவான காலம்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

மீனம்


நீண்டநாட்களாகத் தாங்கள் மகளுக்காக வரண் பார்த்தது இப்போது கூடி வரும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். மாணவர்கள் பரிசினை பெறுவர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு இன்சன்டிவ் கிடைக்கும். பெற்றோரின் உடல் நிலை சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *