TNSC Bank: நகை கடனுக்கான உச்ச வரம்பு 30 லட்சமாக உயர்வு!

Advertisements

சென்னை: கூட்டுறவு துறையின் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், தங்க நகைக்கடன் பிரிவில் அதிகபட்சம், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

சம்பள கடன் பிரிவில் அதிகபட்சம், 7 லட்சம் ரூபாய் வரையும்; சிறு வணிக கடன் பிரிவில் அதிகபட்சம், 50,000 ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது. இதைவிட அதிகமாக, தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து அதிக கடன் வழங்குமாறு, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு ஏற்ப, ஒவ்வொரு வங்கிக்கும் கடன் வழங்கும் இலக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, வங்கிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது, நகை கடனுக்கான உச்ச வரம்பை, 30 லட்சம் ரூபாயாகவும்; சம்பள கடன் உச்சவரம்பை, 15 லட்சம் ரூபாயாகவும்; சிறு வணிக கடன் உச்ச வரம்பை, 1 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுஉள்ளார்.

‘இந்த வகையில், 50,000 ரூபாய் வரையிலான தனிநபர் கடனுக்கு ஒருவரும்; 50,001 ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு இருவரும் பிணையம் அளிக்க வேண்டும்; பிணையம் அளிப்பவர், அரசு ஊழியர் அல்லது சம்பளதாரராக இருக்க வேண்டும்’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *