உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
மதுரை: தேவர் தங்க கவசத்தை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Gold armour of Thevar
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கும் தங்க கவசத்தை அதிமுக பொருளாளரிடம் வழங்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு வங்கிய தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


