சரக்கு சேவை வரி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அதிரடி அறிவிப்பு!!

Advertisements

சரக்கு சேவை வரி மறுசீரமைப்பால் இன்றியமையாப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை விலை குறையும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. 56ஆவது சரக்கு சேவை வரி ஆலோசனைக் கூட்டம் தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலங்களின் முதலமைச்சர்கள், நிதியமைச்சர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துரைகளைத் தெரிவித்தனர்.

இதில் 1200 சிசிக்கு உட்பட்ட எஞ்சின் திறன்கொண்ட கார்களுக்கான வரியை இப்போதுள்ள 28 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாகக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 350 சிசி எஞ்சின் திறன்கொண்ட மூன்று சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கும் வரியை இப்போதுள்ள 28 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாகக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்துறையில் டிராக்டர்களுக்கு இதற்கு முன் 12 விழுக்காடாக இருந்த வரி ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் டயர்கள், உதிரிப்பாகங்களுக்கான வரியும் 18 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றின் மீதான வரி 12 விழுக்காட்டில் இருந்து ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. தையல் எந்திரத்துக்கு இதற்குமுன் இருந்த 12 விழுக்காடு வரி ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மருத்துவக் காப்பீடு, வாழ்நாள் காப்பீட்டுக்கு இருந்த 18 விழுக்காடு வரி நீக்கப்பட்டுள்ளது.
சரக்கு சேவை வரிக் குறைப்புக்கு அரசியல் தலைவர்களும் தொழிலதிபர்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *