குழந்தைகள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவித்ததில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மேடையிலேயே கண் கலங்கினார். 

தனது பிறந்தநாளில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு, மேடையிலேயே கண் கலங்கினார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பிறந்த நாளன்று பிரதமர் மோடி உள்பட பல்வேறு அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார்.

பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனத்தை பார்வையிட்டார். இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு அங்குள்ள குழந்தைகள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவித்தனர்.

இதைக் கண்ட ஜனாதிபதி முர்மு, மேடையிலேயே கண் கலங்கினார்.

இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *