குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்..TNPSC அறிவிப்பு.!

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நீட்டித்து அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6 ஆயிரத்து 574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை கடந்த அக்டோபர் 6ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் அன்றைய தினமே தொடங்கியது.
இதுவரை குரூப்-4 தேர்வு எழுத 9 இலட்சத்து 80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆன்லைனில் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நீட்டித்து அறிவித்தது.
அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிப்பக்கும் கால அவகாசம் நவம்பர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்கான எழுத்து தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *