திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சியா? கட்சியில் இருந்து விலகுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

2001 முதல் 2006 வரை அந்நாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு  அதிகமாக சொத்துக் குவித்து வைத்திருந்தார். அவரோட பெயர்ல மட்டும் இல்லாம அவரோட மனைவி, சகோதரர்கள் மற்றும் மகன்களின் பெயர்களிலும் சொத்துக் குவித்திருந்தார்.

சுமார் 2 கோடியே 7 இலட்சத்திற்கு சொத்துக்களைக் குவித்திருந்தார் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் குற்றம் சாட்டியிருந்தது. 2006-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மேல வழக்கு பதிவு செய்யப்பட்டது.  2009-ல் ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்தார். அதன் பிறகு இந்த வழக்குல உண்மையில்லைனு இந்த வழக்கை முடித்து வைச்சாங்க.

ஆனால் மறுபடியும் 2011-ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, இந்த வழக்கு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில இரண்டு நாட்களுக்கு முன்னாடி சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளட்ட ஆறு பேருமே விடுதலை செய்யப்பட்டாங்க.

திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த இரண்டு மாதங்களாகக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் விலகியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அண்மையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பை அறிவதற்காகத் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அவர் வந்தபோது,

வழக்கமாக அவரது காரில் இடம்பெறும் திமுக கொடி அகற்றப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது. மேலும், அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகளுடன் அவர் வழக்கமான உரையாடலில் ஈடுபடாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, நீண்டகாலமாக நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மற்றும் அண்மைக்கால அரசியல் நகர்வுகள் காரணமாக அவர் கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இன்னும் ஓரிரு வாரங்களில் தனது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்ய அனிதா ராதாகிருஷ்ணன் திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், அவர் திமுகவில் இருந்து விலகுவது குறித்தோ, கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்வது குறித்தோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட அரசியலில் அடுத்தகட்டமாக என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *