தீபாவளிக்கு தங்கம் ஆஃபர்.. டிரம்பால் அடித்த லக்.. அள்ளிக் குவிக்கும் பெண்கள்.!

அமெரிக்க தேர்தல் முடிவுகள், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் முன்கூட்டியே சொல்லியிருந்தார்கள். அதன்படி, தேர்தல் நேரத்தில்.. தங்கம் விலை சடசடவென குறைந்தது. ஆனால், ரிசல்ட் எதிர்பார்த்தபடி வந்திருந்தாலும்.. விலை குறையாமல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இந்த விலை இறங்கவும், திடீரென விலை ஏறவும் மக்களை குறிப்பாக  பெண்களை குழப்பத்திலும், தலையை சொறியவும் வைத்திருக்கிறது. இது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அதாவது, தேர்தல் முடிவுகளில் நாடாளுமன்றத்தின் கீழவையை ஜனநாயக கட்சி கைப்பற்றும் என்ற கணிப்புகளால் டாலர் குறியீடு 0.3% குறைந்தது.

சர்வதேச அளவில் தங்கம் டாலரில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதால்.. டாலர் பலவீனம் அடையும்போது, பிற நாட்டு நாணய பயன்பாட்டாளர்களுக்கு தங்கம் மலிவான விலையில் கிடைக்கிறது. இந்தியாவிலும் தங்கத்தின் விலை கடந்த ஒரு சில நாட்களாக ஓரளவு குறைய தொடங்கியதற்கு இதுதான் காரணம்.

பிரச்சனை என்னவெனில், தங்கத்துக்கு டிமாண்ட் எப்போதும் அதிகம். எனவே விலை குறைய தொடங்கியதால்.. அதிக அளவில் தங்கம் வாங்கி குவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் பத்திரங்களின் வட்டி விகிதம் குறையும் போது, வட்டி தராத முதலீடான தங்கத்தை வைத்திருப்பதற்கான மாற்று செலவும் குறையும். அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி நகர்கின்றனர். இப்படி தங்கத்தை நோக்கி மொத்த பேரும் திரும்பும் போது.. தங்கத்துக்கான டிமாண்ட் அதிகரித்து, விலையும் உயர்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், ஜனநாயக கட்சியின் கைக்கு மாறியுள்ளதால்.. டிரம்ப் அரசின் அரசாங்க செலவுகள் மற்றும் பொருளாதார கொள்கைகளின் முட்டுக்கட்டைகள் ஏற்படலாம். இந்த அரசியல் நிச்சயமற்ற சூழல், முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறது. இது விலை உயர்வுக்கு காரணம்.

நிலைமை இப்படியே இருக்காது. தேர்தல் முடிவுகளால், முதலீட்டாளர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாய் மாறியிருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கி, பணவீக்கத்தை கட்டுப்படுத்த.. மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தினால் விலை உயர்வு தற்காலிகமானதாகவே இருக்கும்.

இன்னும் தெளிவாக சொல்வதனில், பொருளாதாரத்தில் பெரும் நிச்சயமற்ற தன்மை அல்லது நிதி நெருக்கடி ஏற்படும்போது.. முதலீட்டாளர்கள் எந்த ஒரு முதலீடு மீதும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். தங்கத்தின் மீது கூட அவர்கள் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். எனவே எல்லாத்தையும் விற்று அமெரிக்க டாலராகவோ அல்லது ரொக்கப் பணமாகவோ கையில் வைத்திருக்க நினைப்பார்கள்.

இப்படி நடந்தால்.. தங்கத்தின் விலை மீண்டும் குறைய வாய்ப்பு இருக்கிறது என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். தீபாவளிக்குள் இன்னொரு ரவுண்டு தங்கம் விலை குறையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *