இந்திய மாலுமிகள் உயிரிழப்பு – அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

வளைகுடாப் பகுதியில் அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

வளைகுடாப் பகுதியில் அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதல்களில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் தான் பேசியதாகத் தெரிவித்தார்.
அப்போது, வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவின் கடுமையான கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறினார்.
மேலும், வணிகக் கப்பல்கள் மீதான இத்தகைய உயிராபத்தான நடவடிக்கைகள் நியாயமற்றவை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *