ஈரான் போர், அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாசிங்டனில் அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஈரான் போா் 8 மாதங்களாக நீடித்து வருவதாகவும், இதனால் அமெரிக்காவில் எரிவாயு விலை உயா்ந்து வாக்காளா்களை அதிருப்தி அடைய வைத்ததாகவும் தெரிவித்தார். எனவே, தோ்தலில் ஈரான் போா் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.
ஆனால், இந்தப் போர் தவிர்க்க முடியாத ஒன்று என்று தெரிவித்தார். ஈரான் விவகாரத்தில் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததாகவும், அதை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டும் வருவதாகவும் கூறினார். தோ்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடா்ந்து, ஜனநாயக கட்சியினரின் திட்டங்களை வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்து நிறுத்துவேன் என்று தெரிவித்தார்.
இதனால், ஆட்சி நிா்வாகத்தில் முட்டுக்கட்டை ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.


