
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இத்தேர்வுக்கான புதிய தேதி மற்றும் புதிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் 15 நாட்களுக்கு முன்பாகவே தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதற்கான புதிய ஹால் டிக்கெட்டுகள் பிப்ரவரி 13 ஆம் தேதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கபட்டார். தொடர்ந்து, புதிய அலுவலராக வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.





