TNPSC: Group 4 Exam:ஆன்சர் கீ வெளியீடு!

Advertisements

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisements

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 எனப் பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கிடையே ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர். சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர். குரூப் 4 தேர்வை எழுதிய பலரும் பொதுத் தமிழ் எளிதாக இருந்தது. இலக்கணப் பகுதி கடினமாக இல்லை என்றும், பொது அறிவு சார்ந்த கேள்விகள் சற்று கடினமாக இருந்தது என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25ஆம் தேதிவரை ஆன்லைனில் ஆட்சேபிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வர்கள் https://tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=e3561976-cea2-4f11-bda8-0911fce6b16e என்ற இணைப்பை க்ளிக் செய்து விடைக் குறிப்புகள்குறித்து அறியலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *