செஸ் களத்தில் ஜொலித்த மாணவர்கள்..!

புதுச்சேரியில் நடைபெற்ற மாவட்டச் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்குத் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.
புதுச்சேரி தனியார் பள்ளியில் 17 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்டச் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.
முதலிடம் பிடித்த அமிர்தா பள்ளி மாணவி ஜீவிதாவுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற ஆதித்யா குருகுலம் பள்ளி மாணவர் ஜஸ்டின் சாமுவேலுக்கு 30 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. மூன்றாமிடம் பிடித்த பெத்தி செமினேர் பள்ளி மாணவர் ராகுல் ராமகிருஷ்ணனுக்கு 20 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *