வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர் புகைப்படம்..!

Advertisements

உலகிற்கே முன்னுதாராணமான தேர்தலாக தமிழக தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமை தேர்தல் இயக்குநர் ஞானேஷ் குமார் உறுதியளித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் இந்தியத் தலைமை தேர்தல் இயக்குநர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர், தமிழகத்தில் 5 கோடியே 67 இலட்சம் வாக்காளர்கள் இருகின்றனர். இதில், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 87 இலட்சம் பேரும், 18 வயது முதல் 19 வயது வரையிலான வாக்காளர்கள்  12 இலட்சத்து 51 ஆயிரம் பேரும், 20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்கள் ஒரு கோடி பேரும் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, உலகிற்கே முன்னுதாராணமான தேர்தலாக தமிழக தேர்தல் நடைபெறும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் தொலைப்பேசியை கொண்டு வர அனுமதிக் கிடையாது. ஆதலால், வாக்குச்சாவடி வெளியே செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இருக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து, ECIENT என்ற செயலி மூலம் விவரங்கள் அறிந்து கொள்ளலாம் என்றார். பின்னர், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரங்கள் பதிவேற்ற செய்யப்படும் என்று கூறினார்.  இதையடுத்து, தகுதியான ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *