பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக உள்ளது – மா.சுப்பிரமணியன்.!

சுகாதாரத் துறை தரப்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் நலம் காக்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் இதுவரை 47 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், 17 வகையான சிகிச்சை முறைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழையையொட்டி, நகர்ப்புற வளர்ச்சித் துறையுடன் இணைந்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *