
தான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது என்று முன்னாள் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை ஊழல் குறித்த சிபிஐ வழக்கிலிருந்து முன்னாள் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரை விடுவித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர்களை சிறையில் வைத்துள்ளதாகச் சிபிஐக்கு நீதிமனறம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்நது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களிடம் பேசியபோது, தான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது என்றும் உண்மை வென்றது என்றும் குறிப்பிட்டார். இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களின் முன்பு மனமுடைந்து அழுதபடி பேட்டியளித்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளார்.
இதில், குறுகிய கால அரசியலுக்காக பாஜக அரசு புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது என்றார். மத்திய அரசுக்கு எதிராகப் போராடிய முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால், சிசோடியா ஆகியோருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.




