
பெரு தலைநகர் லிமாவில் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. . இதில் ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அஜய் மாலிக் 628.8 புள்ளிகளுடனும், பார்த் ராகேஷ் மானே 627.7 புள்ளிகளுடனும், அபினவ் ஷா 627.0 புள்ளிகளுடனும், முறையே 2, 4, 6வது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
தொடர்ந்து இறுதிச் சுற்றில் அசத்திய பார்த் ராகேஷ் மானே, 250.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துத் தங்கத்தை தட்டிச் சென்றார். மற்ற இந்திய வீரர்களான அஜய் மாலிக் அபினவ் ஷா 4, 7வது இடம் பிடித்தனர்.
ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் அஜய் மாலிக் 628.8 புள்ளிகளுடனும், பார்த் ராகேஷ் மானே 627.7 புள்ளிகளுடனும், அபினவ் ஷா 627.0 புள்ளிகள் அடங்கிய இந்திய அணி 1883.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துத் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
பெண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவுவில் கவுதமி 634.7 புள்ளிகளும், ஷாம்பவி 632.6 புள்ளிகளும், ஓஜாஸ்வி தாகூர் 631.4 புள்ளிகள் அடங்கிய இந்திய அணி 1894.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துத் தங்கம் வென்றது.



