பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை.!

தூத்துக்குடியில் 16 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி யோனசுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

16 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த திரேஸ்புரத்தைச் சேர்ந்த யோனசைப் போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பிரீத்தா, குற்றவாளி யோனசுக்கு 20 ஆண்டுச் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபாய் வழங்கம் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *