Georgia : வூசு போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற கோவை மாணவி.!

Advertisements

ஜார்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச வூசு போட்டியில் விளையாடி ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை வென்ற கோவை மாணவர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜார்ஜியாவின்  பட்டூமி நகரில் இண்டர்நேஷனல் வூசு தொடர் போட்டி  நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் இந்திய அணி சார்பாகப் பங்கேற்ற கோவை கல்லூரி மாணவி பால ஹர்சினி தங்கப் பதக்கம் வென்றார். பள்ளி மாணவர்கள்  ஆகாஷ், அபிருத்ரா ஆகியோர் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்றனர்.

போட்டிகளில் வென்று கோவைக்குத் திரும்பிய மூவருக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு வூசு சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜான்சன், மாவட்டத் தலைவர் கணேசன் ஆகியோர் மாணவர்களுக்குப்  பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *