Today rasipalan:இன்றைய ராசிபலன் – 27.09.24

Advertisements

Today rasipalan:இன்றைய ராசிபலன் – 27.09.24

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 11ம்- தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.32 வரை புனர்பூசம் பின்பு பூசம்

திதி : இன்று மாலை 05.34 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம் : மரண யோகம்

நல்ல நேரம் காலை : 9.15 – 10.15

நல்ல நேரம் மாலை : 4.45 – 5.45

ராகு காலம் காலை : 10.30 – 12.00

எமகண்டம் மாலை : 3.00 – 4.30

குளிகை காலை : 7.30 – 09.00

கவுரி நல்ல நேரம் காலை : 12.00 – 01.00

கவுரி நல்ல நேரம் மாலை : 6.30 – 7.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : கேட்டை

இன்றைய ராசிபலன்

மேஷம்


உத்யோகஸ்தர்களுக்கு நல்லபடியாக வேலை செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

ரிஷபம்


வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்புகள் வரும். உடல் நலம் சிறக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். தாங்கள் எதிர்பார்த்த துணை தங்களுக்கு கிடைக்கும். காதல் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

மிதுனம்


பூர்வீக சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். மருத்துவரிடம் அனுகுவது நல்லது. பணவரவு அதிகமாகும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் ஆனந்தம் குடிகொள்ளும். வயதானவர்கள் அவ்வப்போது கோபப்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கடகம்


குடும்பத்தலைவிகள் தங்கள் கணவரிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. காதலர்களுக்குப் பொறுமை அவசியம். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பர். திருமண பேச்சு வார்த்தை தள்ளிப் போகும். தொழிலில் பழைய நிலை மாறி முன்னேற்றம் தென்படும். நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்


உத்யோகஸ்தர்களுக்கு தங்களைப் பற்றித் தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். காரணம் தங்களுக்கு இன்று சந்திராஷ்டமம். ஆதலால், மிகவும் எச்சரிக்கையுடன் ஊழியர்களிடம் மனஸ்தாபம் வராமல் பார்த்துக் கொள்ளவும். கூடுமானவரை அமைதி காப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி


பெண்களுக்கு நல்ல செய்தி வரும். அது மனமகிழ்ச்சியைத் தரும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தாமதப்பட்டு வந்தடையும். வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுபவரின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பெண்கள் தங்க நகை வாங்க ஆரம்பிப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

துலாம்


எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வங்கி லோன் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். இருந்தாலும் பயணத்தால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விருச்சிகம்


இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு


வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். சித்தர் பீடங்களுக்குச் சென்று வருவீர்கள். அது தங்களுக்கு நல்ல மாற்றத்தினை தரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பெற்றோரின் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மகரம்


பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நலம் தரும். உங்கள் வேலையில் தங்கள் பிள்ளையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்குக் கேட்ட கடன் தொகை கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். இருப்பினும் தாங்கள் அதனைச் செவ்வனே முடித்துக் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

கும்பம்


கலைஞர்களுக்கு உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பெரியவர்களை மதிப்பது நல்லது. காதலர்கள் எந்த ஒரு முடிவையும் பெற்றோரைக் கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்


உங்கள் நண்பர்கள் தங்கள் நிலையினை உணர்ந்து தொந்தரவு செய்யாதிருப்பர், மாறாக உங்களுக்கு உதவுவார்கள். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். உங்களுடன் இருக்கும் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது மிகவும் அதிவேகத்துடன் வாகனத்தை இயக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *