TN CM M. K. Stalin: முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த வாழ்க்கையில் நடந்த டாப் 10 தகவல்கள்!

Advertisements

அரசியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் யார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவரின் சொந்த வாழ்க்கையில் நடந்த டாப் 10 தகவல்களை அறிந்துக்கொள்ளுங்கள்.

மு.க.ஸ்டாலின் ஜாதகத்தில் முதலமைச்சர் ஆகும் கட்டம் இல்லையெனக் கூறி வசைபாடியவர்களுக்கு மே 7 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் அரியணையில் ஏறிப் பதிலடி கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.

1. மு.க.ஸ்டாலினுக்கு 1975-ம் ஆண்டு துர்கா ஸ்டாலினுடன் திருமணம் நடைபெற்றது. அப்போது அவருக்கு வயது 22. கலைஞரின் மகன் என்பதால் இவருக்குப் பெண் கொடுக்கப் பலரும் தயங்கியபோது, முரசொலி மாறன் மூலம் தான் இந்தச் சம்மந்தம் அமைந்தது. பார்த்த முதல் பெண்ணே பிடித்துப் போகத் திருமணம் செய்து கொண்டார் மு.க.ஸ்டாலின். இவரது திருமணம் முடிந்து சென்னைக்கு துர்கா ஸ்டாலினை அழைத்து வரும்போது, தாய் வீட்டைப் பிரிந்து வருவதை நினைத்து அழுதாராம். அதற்கு ஸ்டாலினோ, இன்னும் அழ வேண்டியது நிறைய உள்ளது எனச் சொன்னாராம். நிச்சயம் இப்படி யாரும் ஒரு ஆறுதலை புதுப்பெண்ணுக்கு சொல்ல முடியாது. திருமணத்துக்குப் பிறகு தான் மிசா எனப் பல சிக்கல்களில் சிக்கிய மு.க.ஸ்டாலின் அரசியலில் தான் யார் என்பதை கண்டுபிடித்தார்.

2. மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியும் சரி, மகள் செந்தாமரையும் சரி இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்கள் தங்கள் காதலை முதலில் வீட்டில் ஓகே வாங்க தன்னிடம் தான் சொன்னார்களாம். அதோடு இவருக்கு இருவருமே இரண்டு கண்கள்போல இருக்கிறார்கள்.

3. கலைஞர் கருணாநிதியால்,  ’முத்துவேல் கருணாநிதி எனும் நான் தமிழ்நாடு முதலமைச்சராக’ என்று ஸ்டாலின் பதவியேற்கும்போது  பார்க்கமுடியாமல் போனதால், அடிக்கடி கலைஞர் நினைவிடத்துக்கு சென்று பார்த்து வருவாராம்.

4. ஸ்டாலின் எனத் தான் கலைஞர் எப்போதும் மு.க.ஸ்டாலினை அழைப்பாராம். ஆனால் தாய் வழி உறவினர்கள் பலருக்கும் ஸ்டாலின் என்ற பெயர் வாயில் நுழையாதாம்.

5. இந்தப் பெயரால் பள்ளியில் சீட் கிடைக்காமல் தவித்துள்ளார். இப்போது பெண்கள் பள்ளியாக மட்டும் இருக்கும் சர்ச் பார்க் முன்பு இருபாலரும் படிக்கும் பள்ளியாக இருந்துள்ளது. அப்போது ரஷ்யாவில் பெரிய புரட்சி நடந்ததால், ஸ்டாலின் என்ற பெயரை மாற்றி வந்தால் சீட் கொடுப்பதாகச் சொல்லி உள்ளார்களாம். அதற்குக் கலைஞர் பள்ளியை வேண்டுமானாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்றமாட்டேன் எனச் சொல்லிவிட்டாராம்.

6. உணவைப் பொருத்தவரை தனது மனைவி சமைக்கும் மீன் குழம்பு மிகவும் பிடிக்குமாம். மற்றபடி சைவம் தான் விரும்புவாராம் மு.க.ஸ்டாலின். அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால், அசைவ உணவு அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும் என்பதால் சைவம் மட்டுமே விரும்பிச் சாப்பிடுவாராம்.

7. சாப்பாட்டை பொருத்தவரை வைரமுத்துவின் கவிதை ஒன்றை பின்பற்றுவாராம். பசியோடு உட்கார்ந்து பசியோடு எழுவேன் என்று அந்தக் கவிதையில் ஒரு வரி வருமாம். அதனால் வயிறு முட்டச் சாப்பிட மாட்டாரம் முதலமைச்சர்.

8. கலைஞர் கட்சி ரீதியாக மு.க.ஸ்டாலின் எங்குச் சென்றாலும், நேரிலோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு கட்சி பணிகள்குறித்து பேசுவாராம். அதேபோலத் தான் உதயநிதி ஸ்டாலினை இப்போது மு.க.ஸ்டாலின் பாலோ செய்கிறாராம்.

9. ஸ்டாலின் சாப்பிடும்போது மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அவர் போன் பேசுவது, வேலைபற்றி யோசிப்பது பிடிக்காதாம்.

10. மு.க.அழகிரி தான் ஸ்டாலினுக்கு ஸ்கூட்டர் ஓட்டச் சொல்லிக்கொடுத்தாராம். முதல்முறை கற்றுக்கொண்டபோது கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டாராம் ஸ்டாலின்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *