போருக்குத் தயாராக இருக்கிறோம்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

Advertisements

போரை விரும்பினால் நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகின்ற நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வர 28 அம்சங்களை கொண்ட அமைதி ஒப்பந்தத்தை வெளியிட்டார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொடர்ந்து, இந்த அமைதி ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று உக்ரைனும், அந்நாட்டுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தின. பின்னர், அமைதி ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில், தலைநகர் மாஸ்கோவில் நடந்த முதலீட்டு மன்ற நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின் பேசியப் போது, போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்காவும், அதிபர் டிரம்ப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளைத் ஐரோப்பிய தடுத்து வருகின்றன. தொடர்ந்து, ஐரோப்பா போரை விரும்பினால், நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம் என்று எச்சரிக்கை விடுத்தார். பின்னர், ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு பதிலடியாக உக்ரைன் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *