Fraud Case: நிலக்கரி ஜாக்பாட் அடித்ததாகக் கூறி மோசடி!

Advertisements

சீனா நாட்டிலிருந்து நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாகக் கூறி சுமார் ரூ.2.97000 கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றி மோசடி செய்த நபரைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை: கோயம்பேட்டை சேர்ந்த மணிவண்ணன் (56) என்பவரிடம் அவருக்கு அறிமுகமான நபரான சுரேஷ் (54) என்பவருக்கு ஜாக்பாட் அடித்ததாகக் கூறி சீனா நாட்டில்100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரியை வெறும் 3 கோடி ரூபாய்கொடுத்தால் இரண்டு மடங்காக 6 கோடி ரூபாய் வருவாய் ஏற்படும் என ஆசை வார்த்தை கூறிஉள்ளார்.இதற்கு ஆசைப்பட்ட மணிவண்ணன் சுமார் ரூ.2.97000 கோடிரூபாயை சுரேஷ் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

பின்னர் மணிவண்ணனின் வங்கியின் பண பரிவர்த்தனை சுரேஷ் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் பின்னர்மோசடி செய்து விட்டதாகவும் அதற்கு மாறாகச் சுரேஷின் முக்கிய ஆவணங்கள் மற்றும் மனைவி ஈஸ்வரியின் அசல் முக்கிய ஆவணமும் மணிவண்ணரிடம் கொடுத்து இருந்த நிலையில் சீனாவில் உள்ள நிலக்கரி விவகாரம்குறித்து சரியான ரீதியில் பதிலளிக்காததால் நேரடியாகச் சென்று பார்த்தபோது வீட்டில் இல்லாமல் தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் மணிவண்ணன் புகார் அளித்தார்.கொடுத்த புகாரில் பேரின் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் பின்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்துச் சுரேஷ் என்பவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் பின்னர் சுரேஷின் செல்போனை ட்ராக் செய்ததும் அண்ணா நகரில் பதுங்கிஇருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படத்தில் புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் இது போன்ற தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் ஆசை வார்த்தை கூறும் பேச்சால் கவனத்தை எழுந்திட வேண்டாமெனச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் பத்தூர் அவர்கள் இந்த வழக்கு தொடர்பாகத் தலைமறைவாக இருந்த மோசடி மன்னனான சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரை வெகுவாகப் பாராட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *