TN BJP: உதயநிதிக்கு எதிராகக் களம் இறங்கினர்!

சனாதனம் குறித்த தனது கருத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை என்கிறார் உதயநிதி. ஈ.வே.ரா., வைப்பின்பற்றிச் சனாதனம் பற்றிப் பேசியதாக விளக்கம் அளித்துள்ளார்…

சென்னை: சனாதனம் குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்ய டி.ஜி.பி., க்கு உத்தரவிட வேண்டும் எனக் கவர்னர் ரவிக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சனாதனம் குறித்த தனது கருத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை என்கிறார் உதயநிதி. ஈ.வே.ரா., வைப்பின்பற்றிச் சனாதனம் பற்றிப் பேசியதாக விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பிட்ட சமூக மக்களைக் குத்தி கொல்ல வேண்டும் எனக்கூறியவர் ஈ.வே.ரா. இவரைப் பின்பற்றும் உதயநிதி, சனாதனத்தை பின்பற்றுபவர்களைக் குத்தி கொல்ல வேண்டும் என்கிறாரா.

உதயநிதி பேச்சால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மனம் புண்பட்டு உள்ளது. சனாதன ஒழிப்பு பேச்சால் தமிழக அமைதியை குலைக்க முயற்சி நடக்கிறது. உதயநிதி மீது போலீசில் பா.ஜ., புகார் அளித்தது.

ஆனால், முதல்வரின் மகன் என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முன்வரவில்லை. இதனால், உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபி. க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *