திமுகவிற்கு குடும்ப ஆட்சி தான் முக்கியம் – பிரதமர் விமர்சனம்.!

திமுகவிற்கு குடும்ப ஆட்சி தான் முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

கோவையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, பேசிய அவர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, அவர்களுக்கு குடும்ப ஆட்சி தான் முக்கியம் என விமர்சித்தார். மேலும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுள்ளதாகவும் ஊழல் நிறைந்த ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *