Vijayalakshmi: பாலியல் புகாரில் மருத்துவ பரிசோதனை!

Advertisements

சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன…

சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படி புகார் கொடுத்தார். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். இதில் பல விவரங்களைப் போலீசார் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார். வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் நீதிபதியிடம் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காகப் போலீசார் அழைத்து வந்துள்ளனர். 6 முறைக்கு மேல் தன்னை சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக, விஜயலட்சுமி புகாரில் குறிப்பிட்டு இருந்த நிலையில், இதன் உண்மைத்தன்மைக்காகத் தற்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *