பாஜக மற்றும் அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கான தடைக்கற்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியபோது, தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுக்க துணிந்து விட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு 11 ஆவது தோல்வியை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
வெகுமானத்திற்காக தன்மானத்தை இழந்து, துரோகம் செய்கிற அடிமை கூட்டத்திற்கு தமிழ்நாடு சரியான பாடம் புகட்டும் என்றும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாசிச பாஜக, அடிமை அதிமுக-வும் வீழ்த்தப்படும் என்றும் தெரிவித்தார். டப்பா என்ஜின் என வருவது எதற்காக, உரிமைத் தொகையை நிறுத்துவதற்காகவும் இடஒதுக்கீட்டை பறித்து சமூக நீதியை படுகுழியில் தள்ளுவதற்காகவும் தான் என்று கூறினார்.
பாஜக மற்றும் அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள் என்று குற்றம் சாட்டினார்.


