டிரம்பிற்கு எந்த உரிமையும் இல்லை – பிரசில் அதிபர் எச்சரிக்கை..!

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எந்த உரிமையும் இல்லை என பிரசில் அதிபர் லூலா டா சில்வா தெரிவித்துள்ளார்.

பிரசில் அதிபர் லூலா டா சில்வா, தனியார் நாளிதழில் போர் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அமைதியைப் பேணுவதில் சக்திவாய்ந்த தலைவர்கள் அதிகப் பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

உலகை அச்சுறுத்தி போர்களை அறிவிக்கும் ஒரு நாட்டின் அதிபர் உடன் நம்மால் வாழ முடியாது என்றும் விமர்சித்தார். மக்கள் பட்டினியால் வாடும் தருணத்தில், உலகம் இரண்டரை ட்ரில்லியன் டாலர் ஆயுதங்களுக்காக செலவிடுகிறது என்றும் கூறினார்.

பூமியை கார்பன் உமிழ்வில் இருந்து மீட்பது பற்றிப் பேசிக்கொண்டே ஒவ்வொரு நாடுகள் மீதும் குண்டுகள் வீசப்படுகின்றன எனக் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *