அமோனியா கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திரௌபதி முர்மு இரங்கல்.!

Advertisements

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட அமோனியா கசிவு விபத்தில், பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை அறிந்து, தான் மிகுந்த மனவேதனை அடைந்தாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகில் உள்ள தனியார் மீன் தீவன ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 62 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட சோகமான விபத்தில், பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை அறிந்து தான் மிகுந்த மனவேதனை அடைந்தாகத் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்தத் துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் தன் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் என்றும் இருக்கும் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *