
இந்திய மகளிர் ஹாக்கி வீரர்கள் பெருமையையும் மகிழ்ச்சியையும் தேடித்தந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின், ஆக்லாந்தில் நடைபெற்ற எஃப்.ஐ.ஹெச் ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இந்திய ஹாக்கி வீரர்கள் பெருமையையும் மகிழ்ச்சியையும் தேடித்தந்துள்ளதாகத் தெரிவித்தார்.
எஃப்.ஐ.ஹெச் ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தத் தொடர் முழுவதும் நமது அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த வெற்றி, இன்னும் பலரைப் பெருமையுடன் ஹாக்கி விளையாட ஊக்கமளிக்கட்டும் என்று தெரிவித்தார்.


