Seeman: விசாரணை நடத்தாமல் சென்னை திரும்பிய தனிப்படை!

Advertisements

ஊட்டிச் சென்ற 5பேர் கொண்ட தனிப்படை போலீசார் சீமானிடம் விசாரணை நடத்தாமல் சென்னை திரும்பியுள்ளனர்…

ஊட்டி: நடிகை விஜயலட்சுமிநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகக் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படி புகார் கொடுத்தார்.

இதுகுறித்து நேற்றுமுன்தினம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார்.

இதில் பல விவரங்களைப் போலீசார் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்தனர்.ஆனால் ஊட்டிச் சென்ற 5பேர் கொண்ட தனிப்படை போலீசார் சீமானிடம் விசாரணை நடத்தாமல் சென்னை திரும்பியுள்ளனர்.

விசாரணை நடத்தாமல் தனிப்படை போலீசார் திரும்பியதற்கான கரணம் என்னவென்று தெரியவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *