Tipper Lorry Owners: சங்கமாட முக்கியம்… நமக்குச் சாப்பாடுதான் முக்கியம்!

எங்களுக்கும் பசிக்குமில்ல…!பசி தாங்காத சங்க உறுப்பினர்களின் பரிதாபம்..!

திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், மத்திய அரசின் ஹிட் அண்டு ரன் புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிருதம் இருந்தனர்.

3 மணி நேரத்தில் ஆளுக்கு ஒரு பிரியாணி பொட்டலத்துடன் அனேக பேர், ஒதுங்கியதால் உண்ணாவிரத பந்தல் காலியானது.சங்கமாட முக்கியம் , நமக்கு சோறு தாண்டா முக்கியம் என பிரியாணியை மூக்கு முட்ட சாப்பிட அபீட்டான லாரி சங்க உறுப்பினர்கள் தான் இவர்கள்…….

திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர், மத்திய அரசின் ஹிட் அண்டு ரன் புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் …. திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்… உள்ளிட்ட பல்லேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கலகலப்பான போராட்டத்தில்,  சுமார் 200க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

போராட்டம் நடந்த 3 மணி நேரத்தில் சங்கமாட முக்கியம் , நமக்கு சோறு தாண்டா முக்கியம் என பிரியாணியை மூக்கு முட்ட சாப்பிட சென்று விட்டனர்.எறும்பு போல் சாரைசாரையாக பிரியாணி வாசம் பிடித்து கிளம்பியதால், உண்ணாவிரத பந்தல், மாதவன், வடிவேலு நடித்த ரெண்டு படத்தில் வரும் தி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ அரங்கம் போல, அளே இல்லாத காலிச்சேர்களாய் காட்சி அளித்தது.

உண்ணாவிரத போராட்டம்னு சொல்லி கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையின் ஓரங்களில் குழுவாக அமர்ந்து சுவையான பிரியாணியை வெட்டு வெட்டு என வெட்டினர்.

பசி தாங்காத சங்க உறுப்பினர்கள் உண்ணாவிரத்தத்துக்கு ஏற்பாடு செய்தது எதுக்குப்பா.. என சிலரும், சங்கமாட முக்கியம் நமக்கு சாப்பாடுதான் முக்கியம் என கமெண்ட் அடித்தபடி கலகலப்பாக ரோட்டில் அமர்ந்து பிரியாணியை வெட்டு வெட்டுனு வெட்டிகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *