Royapuram: பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஹவுஸ் ஓனர்!

Advertisements

சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்ணை Spy pen என்ற ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் எடுத்து வந்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் (MDS)கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராயபுரம் என்ற பகுதியில் இப்ராஹிம் (36). முதுநிலை பல் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவரது வீட்டில் பெண் ஒருவர் தனது கணவர் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அந்த வாடகை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இப்ராஹிம் நுழைந்து குளியலறை அருகே ஸ்பை பெண் (Spy Pen) என்ற ரகசிய கேமராவை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இதன் மூலம் அந்த பெண் குளிப்பதை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து ரசித்து வந்துள்ளார். இந்நிலையில் குளியல் அறைகள் சந்தேகத்திற்கு இடமாக ஸ்பை பேனா இருந்ததை பார்த்து அந்த பெண் கணவரிடம் காண்பித்துள்ளார்.

அப்போது அதில் கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து  ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இப்ராஹிம் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இதனையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து முதுநிலை பல் மருத்துவ மாணவர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *