Thiruvallur: பனை மரங்களில் அதிகாரிகள் ஆய்வு!

Advertisements

தமிழகத்தில் முதன்முறையாகத் தொடங்கப்பட்ட பனை விதை வங்கிஅமைப்பு மூலம் நடவு செய்யப்பட்ட பனை செடிகளில் வாடல் நோய் பூச்சி தாக்குதல்குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தமிழகத்திலேயே முதல் முறையாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் “பனைவிதை வங்கி” என்ற அமைப்பை ஊரக வளர்ச்சி துறையின் மூலம் உருவாக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சோழவரம் ஒன்றியத்தில் உட்பட்ட நெற்குன்றம் ஊராட்சியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட பனை செடிகள் நன்றாக இரண்டு அடி உயரதிற்க்கு வளர்ந்து இருந்தது. அது தற்போது திடீர் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டு காணப்படுவது குறித்து நெற்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, பனை விதை வங்கியின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து தோட்டக்கலை துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சோழவரம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் திவ்யா, நெற்குன்றம் ஊராட்சியில் நடவு செய்யபட்டு, நோய் தாக்குதலுக்கு உள்ளான பனை செடிகளை நேரில் ஆய்வு செய்தார்.
நேரடியாகச் சென்று பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட இரண்டு வயதுடைய பனைச் செடிகளை ஆய்வு செய்தார்.வாடல் நோய் தாக்குதலுக்கு ஆளானதாக ஆய்வில் தெரியவந்தது. இதனைதொடர்ந்து பூச்சி தாக்கப்பட்ட பனை ஓலைகளை அறுத்தெடுத்து பனை செடிகளுக்கு மருந்துகள் இடப்பட்டன.மேலும், பனை செடிகளைப் பராமரிப்பது குறித்தும் செடிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய மருத்துவ குறிப்புகள் மற்றும் அதைக் கையாளும் முறை குறித்தும் அறிவுரை வழங்கினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *