புதிய மாற்றம்… புதிய ஆட்சி..!

தமிழகத்தைப் புதிதாக ஒருவர் ஆள வேண்டும் என்ற எண்ணமே மக்களிடையே மேலோங்கியுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் பேசினார்.அப்போது, இரண்டு அரசியல் இயக்கங்களே தொடர்ந்து தமிழகத்தை ஆள வேண்டுமா? அல்லது புதிதாக ஒருவர் தமிழகத்தை ஆள வேண்டுமா? என்பதற்கான விடையை மக்கள் தீர்மானித்து விட்டதாகத் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் புதிதாக விஜய் வந்துள்ள நிலையில், அவரது வருகை பிற அரசியல் கட்சிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தோல்விப் பயத்தின் காரணமாகவே அவர்கள் விஜயை விமர்சிப்பதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *