Kodaikanal Municipality: அலட்சியப் போக்குடன் செயல்படும் நகராட்சி.. பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கொடைக்கானல் நகராட்சிமூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை 24-வது வார்டு பகுதியில் கொட்டுவதற்காக லாரிகளில் கொண்டு வரும்போது சாலைகளில் கொட்டிக் கொண்டே செல்வதால்  தொற்று நோய் ஏற்படுவதுடன் சாலை முழுவதும் குப்பைகளாகக் காட்சியளிப்பதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

கொடைக்கானல் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தையும் சுற்றுலாவை மட்டும் இப்பகுதி மக்கள் நம்பி வாழ்ந்து வரும் சூழ்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு பகுதியான செண்பகனூர் முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகவும் உள்ளது.இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் செண்பகனூர் பகுதியில் உள்ள பிரகாசபுரத்தில் குப்பைகளைக் கொட்டுகின்றனர்.

குப்பைகளை நகராட்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரித்து கொண்டுவரும் லாரிகளில் மேற்பகுதியை மூடாமல் கொண்டு வருவதால் செண்பகனூர் பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் குப்பைகள் கூட்டிக்கொண்டு செல்கிறது. இதன் காரணமாகச் சாலையில் இரு பகுதிகளிலும் குப்பைகள் விழுவதாகும் துர்நாற்றம் வீசுவதாகவும் மேலும் கொண்டு செல்லப்படும் குப்பைகளைத் தீ வைத்து எரிப்பதாகும் இதனால் சுகாதார சீர்கேடு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் சேகரிக்கப்படும் குப்பைகளை முழு கவர் செய்து கொண்டு வாருங்கள் என்று கூறியும் அலட்சியப் போக்குடன் செயல்படுவதால் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *