நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியீடு.!

Advertisements

பிரபல நடிகர் கவின் நடிக்கும் ‘ஹாய்’ என்ற புதிய படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிரபல நடிகர் கவின், ‘லிஃப்ட்,’ஸ்டார்’, ‘கிஷ்’, ‘டாடா’, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, ‘ஹாய்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைகிறார்.

இப்படத்தில், நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படுவது போல இப்படம் உருவாகியுள்ளது.

இதனிடையே, இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் நடிகர் கவின் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *