
தூத்துக்குடி சிதம்பரம் நகரில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முன்பகுதியில் உள்ள கீரில் கேட் மற்றும் கதவை உடைத்து கொள்ளையடிக்க உள்ளே புகுந்த மர்ம நபர் கையில் எதுவும் சிக்காததால் திரும்பிச் சென்ற மர்ம நபர் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கொள்ளை முயற்சிகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் சிதம்பர நகர் 1,வது தெருவில் அமைந்துள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வங்கி பூட்டி இருந்தது இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை வங்கிக்கு ஊழியர்கள் வந்து பார்த்தபோது வங்கியின் முன் வாசல் பகுதியில் அமைந்துள்ள கிரில் கேட் உடைக்கப்பட்டு அதற்கு அடுத்ததாக இருந்த கதவும் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது,
இதைத்தொடர்ந்து வங்கியின் சீனியர் மேலாளர் அனுக்கிரஹா தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் தடயவியல் பிரிவினர் வங்கியில் சோதனை செய்தனர், மேலும் வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சோதனை செய்ததில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் வங்கியின் வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கீரில் கேட் மற்றும் கதவை உடைத்து வங்கியின் உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்று இருப்பது தெரிய வந்தது, ஆனால் வங்கியில் மர்ம நபர் கொள்ளையடித்துச் செல்லப் பணமோ நகையோ எதுவும் அவரது கையில் சிக்காததால் ஏமாற்றத்துடன் மர்ம நபர் வங்கியை விட்டு வெளியேறுவது தெரியவந்தது,
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வங்கி மேலாளர் அனுக்கிரஹா அளித்த புகாரின் அடிப்படையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கதவை உடைத்துஉள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரைத் தென்பாகம் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் தேடி வருகின்றனர், மேலும் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஒருவருக்கு மட்டும் தொடர்பு உள்ளதா அல்லது வேறு ஏதேனும் வங்கிக் கொள்ளை கும்பல் இந்தக் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் வங்கியின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


