மாநிலங்களின் பங்களிப்புடன் தேசிய முன்னேற்றம் – பிரதமர் நரேந்திர மோடி!

Advertisements

நிதி ஆயோக் கூட்டத்தில் கூட்டாட்சித் தத்துவத்திற்கான நமது அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 11 ஆவது நிதி ஆயோக் கூட்டம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நிதி ஆயோக் கூட்டத்தில் தற்சார்புக்கு முக்கியத்துவம் அளிப்பது, உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் சீர்திருத்தங்களுக்கான பயணத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பரந்த அளவிலான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், தேசிய முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்ற நமது அரசின் நம்பிக்கைக்கு ஏற்ப, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்திற்கான நமது அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டதாகக் கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *