Advertisements

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது 65-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரபல நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தனது 28-வது வயதில் கட்சியை ஆரம்பித்து, 36 ஆண்டுகள் கட்சியைக் கட்டிக் காப்பாற்றி, தன்னுடைய கொள்கைகளையும் சித்தாந்தத்தையும் விட்டுக் கொடுக்காமல், ஒரு தொண்டனையும் இழக்காமல், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென்று ஓயாமல் போராடி அதையும் சாதித்தவர் என்னுடைய அருமை நண்பர் தொல். திருமாவளவன்.
65-ஆவது வயதில் நுழையும் இந்தத் தருணத்தில் அவர் பெரும் பேறும் புகழும் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று நடிகர் ரஜினிகாந்த் தனது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
Advertisements


